Skip to main content

டூவீலர் பறிமுதல்... போலீசாருக்கு அதிரடி உத்தரவு???

Published on 23/04/2020 | Edited on 24/04/2020

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முதலில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. மேலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது மத்திய அரசு.

 

Two-wheeler confiscation ... Action warrant for police ???


இருப்பினும் மக்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 'எதற்காக வெளியே செல்கிறீர்கள்' என்றால், 'மெடிக்கல் கடைக்கு போகிறோம், மளிகை பொருட்கள் வாங்க போகிறோம்' என ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள். போலீசார் எவ்வளவோ அறிவுரைகள் சொன்னாலும் இருசக்கர வாகனங்களில் வெளியே வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. காரணமில்லாமல் வாகனங்களில் வெளியே வருவோரிடம் அபராதம் விதித்தாலும் வெளியே வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.


இந்த நிலையில், நடந்து போய் வாங்கும் தூரத்தில் மளிகைக் கடை, மெடிக்கல் என எல்லாமே இருக்கிறது. அப்படி இருக்கும் போது பைக்கில் சுற்றும் நபர்களை மறித்து பைக்கை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் காவல்நிலையத்தை அணுகி, அவர்களுக்கான பார் கோடு உள்ள பாஸ்களை பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் இதைத் தவிர காரணமில்லாமல் பைக்கில் வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் ஐந்து லாரிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். தயார் நிலையில் உள்ள லாரிகளில் அந்த பைக்கை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மதுரை போலீசாரிடையே வாட்ஸ் அப்பில் இந்த தகவல் பரவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மேலும் ஒரு பாலியல் வழக்கு; ரேவண்ணாவுக்கு ஜாமீன் மறுப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nm

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இதில் குற்றத்தின் தீவிரத்தை கருதி ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அவருடைய வீட்டில் பணிபுரிந்த பெண்கள் உட்பட பல பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பியது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வழக்கும், மைசூர் கே.ஆர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையம் ஒரு வழக்கும் என  மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் குறித்து கர்நாடக அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை உருவாக்கி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா  ஒரு மாதம் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒவ்வொரு வழக்கிலும் மூன்று முறை போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் பதிவான வழக்கிலிருந்து ஜாமீன் வேண்டுமென நேற்று மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது. இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் அடிப்படையில் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஜமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. மூன்று வழக்குகள் இருக்கும் சூழ்நிலையில் நேற்று புதிதாக ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதால் ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க நேரிடும். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணங்களை காட்டி ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிபதி முன்பு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தை கருதி பிரஜ்வல் ரேவண்ணா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.