![Two more arrested in T. Malai ATM robbery](http://image.nakkheeran.in/cdn/farfuture/-Ac7-l-DpBXkY8r8_K2zMvFEkB507_S2guhZB58tVdU/1676983320/sites/default/files/inline-images/n223335_1.jpg)
கடந்த 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் 70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் ஆரிப், ஆசாத் என இரண்டு பேரை ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தமிழக போலீசாரின் தனிப்படை ஹரியானா, குஜராத், கர்நாடகாவின் கோலார் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தியதில் ஹரியானாவில் ஆரிப், ஆசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவருக்கும் மார்ச் மூன்றாம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.