Skip to main content

பொய் வழக்குதான் என்பதை நிரூபிப்பேன் - டி.டி.வி. தினகரன்

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
ttvdhinakaran




இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது என கூறி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
 

இந்த வழக்கில் லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், மோசடி, சாட்சியங்களை கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் டி.டி.வி. தினகரன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் ஆகியோர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது.
 

வழக்கில் இருந்து நத்துசிங், லலித் குமார், குல்பித் குந்த்ரா உள்பட 5 பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. டி.டி.வி. தினகரன் மீதுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்