Published on 19/04/2022 | Edited on 19/04/2022

திருச்சி மாநகராட்சியில் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை மனுவாக எழுதி அளித்தனர். இந்தக் குறைதீர் முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி மேயர் அன்பழகன் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.