vaiko

கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை முதலமைச்சர் ஆவதற்கு நான் ஆசைப்பட்டதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisment

கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை முதலமைச்சர் ஆவதற்கு நான் ஒருபோதும் ஆசைபட்டதில்லை. இது அனைவருக்கும் தெரியும். இன்று அல்ல 1993ல் இயக்கம் தொடங்கிய நாள் முதல், எந்த இடத்திலும் என்னை முதலமைச்சர் என்று முழக்கமிட கூட அனுமதித்தது இல்லை. அந்த காலத்தில் முழக்கமிட்டவர்களை கண்ணத்தில் அறைந்திருக்கிறேன். இப்போது அடிப்பது இல்லை என அவர் கூறியுள்ளார்.