Skip to main content

கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

trichy incident police commissioner imposed the goondass act

 

கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் 11- ஆம் தேதி அன்று திருச்சி மாவட்டம், தென்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவரிடம் கத்தியைக் காண்பித்து ரூபாய் 1,000 பணத்தை பறித்து வழிப்பறி செய்ததாக, மர்ம நபர் மீது  தில்லைநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக, வெந்தகை பாலா என்கிற பாலமுருகன் (வயது 37) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி, அவரை சிறையில் அடைத்தனர். 

 

வெந்தகை பாலா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், அந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டனர். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் பாலமுருகனுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்