Skip to main content

சீமானுடன் முரண்; பாலாவுடன் பிரிவு - காரணம் பகிர்ந்த அமீர்

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
ameer about bala and seeman

இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நக்கீரன் ஸ்டூடியோஸ் யூடிப் தளத்தில் படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, பாலா மற்றும் சீமானிடம் இடைவெளி ஏற்பட்டது தொடர்பாக பேசிய அவர், “பாலாவுடைய இடைவெளி என்பது, அரசியல் ரீதியாக கருத்து முரண்களால் ஏற்பட்டது அல்ல. சினிமா எனும் மாயையால் ஏற்பட்டது. இங்கு, ஒரு இயக்குநர் இப்படித்தான் இருக்க வேண்டும், நடிகர் இப்படித்தான் இருப்பார் எனப் பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது எதுவுமே அவர்களுடைய ஒரிஜினல் கேரக்டர் கிடையாது. அது வேறு. வீட்டில் என்னவாக இருக்கிறார்களோ அதுதான் அவர்களுடைய ஒரிஜினல். பொதுவெளியில் அவர்கள் பெற்றிருக்கிற வெற்றியின் அடிப்படையில், அவர்களுடைய சம்பளத்தின் அடிப்படையில், வரவேற்பின் அடிப்படையில், வியாபாரத்தின் அடிப்படையில் வைத்து, கட்டமைக்கப்படுகிற பிம்பம், அதை ஏற்காமல்தான் நானும் பாலாவும் பிரிந்தோம். 

ஆனால் சீமானுடன் ஏற்பட்ட இடைவெளி, அரசியல் ரீதியான கருத்துக்கள். ஒரு வேளை நான் சொன்னது நாளைக்கு சரியாக இருக்கலாம். ஒரு வேளை அவர் சொன்னது கூட நிஜமாக இருக்கலாம். இதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். பிரிந்தோமே தவிற உறவே இல்லாமல் இல்லை. பாலா இப்போதும், என்னுடைய வீட்டில் வந்து என் அண்ணனுடன் பேசிக்கொள்கிறார். நானும் அவருடைய குடும்பதினருடன் பேசுவேன். சினிமாவில் உறவில்லை. சீமானுடனும் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கேன். அண்ணன் தம்பி உறவுகளிலிருந்து நான் விலகவில்லை. அரசியல் எங்களைப் பிரித்து வைத்துள்ளது. எது சரி, தப்பு என்று காலம் தான் முடிவுசொல்லும்” என்றார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

'பாமகவிற்குக் கடைசி தேர்தல்; சீமான் கீழ்பாக்கத்திற்குப் போகவேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தல் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

'பணம் கொடுத்து தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பாமக தான் கிட்டத்தட்ட 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பாமகவை பொறுத்தவரை நான் இந்த தேர்தல் ஆரம்பிக்கும் போதே சொன்னேன். இதுதான் அவர்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் என்று. ஏனென்றால் அவர்கள் கூட சேர்ந்து இருப்பவர்கள் மிகவும் மோசமானவர்கள், வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அது மட்டுமல்ல ராமதாசை பொறுத்தவரை நாங்கள் இனிமேல் மரம் வெட்ட மாட்டோம் என்று சொன்னால் தான் தமிழ்நாட்டில் டெபாசிட்டே வாங்க முடியும்'' என்றார்.

தொடர்ந்து சீமான் குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோதே, 'சீமானுடைய கருத்துகள் எல்லாம் நான் கருத்தாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவரை பொறுத்தவரை ஒன்று குற்றாலத்திற்கு செல்ல வேண்டும். அல்லது கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு நாள் ஒன்று பேசுகின்றார் மறுநாள் இன்னொன்றை பேசுகின்றார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு மேலே கொஞ்சம் குழம்பி இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு சென்று உள்ளதா? என்ற கேள்விக்கு 'எல்லா தமிழர்களின் ஓட்டும் திமுகவிற்கு சென்று இருக்கிறது' என்றார்.

Next Story

“இந்தியன் 2 படம் மாதிரி 10 படம் எடுத்தாலும் ஊழல், லஞ்சம் ஒழியாது” - சீமான்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
 Seeman spoke about indian 2 movie

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் இன்று (12-07-24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இந்தியன் 2 திரைப்படத்துள்ளார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த படத்தை எல்லோரும் பார்த்து ஆதரவு தர வேண்டும். அப்பொழுது தான் இந்த மாதிரி சிறந்த படைப்புகள் தொடர்ந்து வரும். இந்த படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் கேடுகெட்டு புறையோடி அழுக்கு சமூகமாக இருக்கிற இந்தச் சமூகத்தை பழுது பார்க்கிற ஒரு கலையாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். 

இந்த மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியாது. நாம் எல்லோரும் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மாறினால் தான் இந்தச் சமூகம் மாறும். ஊழல், லஞ்சம் இருக்கிற வரை இந்தப் படத்திற்கான தேவை இருக்கத்தான் செய்யுது. நோய் இருக்கும் வரை மருந்து கொடுத்துதான் ஆக வேண்டும். தாயின் கருவறை முதல் கோவில் கருவறை வரை லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளது. கோவிலில் சிறப்புத் தரிசனம் உள்ளிட்டவற்றில் இருந்துதான் லஞ்சம், ஊழல் தொடங்குகிறது. 10 படம் எடுத்தாலும் லஞ்சம், ஊழல் ஒழியாது” என்று கூறினார்.