Skip to main content

திருச்சியில் தரைக்கடைகளை அகற்ற சொல்லி வியாரிகள் சங்கம் சார்பில் 1 நாள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு ! 

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் திடிர் என பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

t


இந்த சந்திப்பில் திருச்சியில் உள்ள முக்கிய வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கோவிந்தராஜீலு .. நீதிமன்றம் 3 மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டியில் எங்கே தரைக்கடை போடலான்னு முடிவு பண்ணவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால் திருச்சியில் பெரிய கடைகளுக்கு முன்னாடி தரைகடை போட்டுக்கொள்கிறார்கள். கடைகளுக்கு வரும் கஸ்டமர்களை தரைக்கடை வியாபாரிகள் தடுக்கிறார்கள். அதுவும் இல்லாமல் கடைகளுக்கு முன்னாடி கடையை வைத்து கொண்டு கஸ்டமர்களை கண்டபடி திட்டுகிறார்கள். இது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

t

 

மாநகரில் அனைத்து வரிகளையும், முறைப்படி வாடகை கொடுத்து கடை நடத்தி வருகிறார்கள். ஆனால் தரைக்கடை வியாபாரிகள் எந்த வரியும் கட்டுவதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் சிலர் துணையோடு கடை நடத்துகிறார்கள்.

 

இதனால் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அந்த தரைக்கடைகளை கடைகளுக்கு முன்னாடி கடை போடாமல் அப்புறப்படுத்த வேண்டும். திருச்சி முக்கிய அடையாளமான தெப்பக்குளம், மலைக்கோட்டை, ஆர்ச் இதை எல்லாம் மறைத்துக்கொண்டு தரைக்கடை போடுகிறார்கள். இவர்களால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகிறது. இவர்களை அகற்ற வேண்டும் என்று எங்கள் கோரிக்கையாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்கு மாநகராட்சியின் எல்லையில் எவ்வளவே இடங்கள் இருக்கிறது. சென்னை மாதிரியான பெரு நகரங்களில் தரைக்கடைகளுக்கு என்று ஒரு இடத்தை ஒதுக்கி வாடகைக்கோ அல்லது இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். 

 

போக்குவரத்து நெரிசலை தவிர்த்து சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முன் வரவேண்டும். இது குறித்து பல வருடங்களாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் எங்களுடைய வாழ்வாதாராம் பாதிக்கப்படும். எங்கள் நிலை கடையை நடத்துவதும் ஒன்றும் தான், நடத்தாமல் இருப்பது ஒன்று தான் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

 

பெரியகடைவீதி, நந்திகோவில்தெரு, சின்னகடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, இந்த ஒரு நாள் அடையாள கடை அடைப்பு போராட்டத்தில் அரசுக்கோ, எங்களுக்கு இழப்பு இருந்தாலும் பரவாயில்லை. இது எங்களுடைய வாழ்வாதார பிரச்சனை, இதனால் ஜீலை 9 கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டத்திற்கு பிறகு தீர்வு இல்லை என்றால். அடுத்த கட்ட போராட்டம் குறித்து அப்போதே அறிவிப்போம். 

 

எங்களுக்கு மற்றவர்கள் மாதிரி மாநகராட்சியை முற்றுகையிடுவது, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது பேருந்து மறியல் இந்த மாதிரியான எந்த போராட்டத்திற்கும் வியாபாரிகள் தயாராக இல்லை. அறவழியில் நாங்கள் போராடி பார்த்துவிட்டோம். தற்போது இந்த போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம் என்றார். 

சார்ந்த செய்திகள்