Published on 25/02/2025 | Edited on 25/02/2025

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே மேலகுன்னத்தூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தின் வாயிலில் மலம் கழித்த அருவருக்கத்தக்கச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனையடுத்து அங்கன்வாடி மையத்தின் வாயிலில் மலம் கழித்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர் ஒருவர் அங்கன்வாடி மையத்தில் மலம் கழித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இது போன்றதொரு அவல சம்பவம் நேர்ந்ததாக தற்போது அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.