சேலம் மாநகரில் முக்கிய பகுதியாக உள்ளது அம்மாப்பேட்டை பகுதி. இந்த அம்மாப்பேட்டை சாலை என்பது சேலம் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலை ஆகும். மேலும் சேலம் - சென்னை மற்றும் கடலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த சாலையில் பயணிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையில் "போக்குவரத்து சிக்னல்" இருந்தும் அது செயல்படவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் ஏற்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த போக்குவரத்து சிக்னல் அமைத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஒரு முறை கூட இந்த சிக்னல் ஆனது செயல்படவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது என்பது அனைவராலும் எளிதில் காண முடிகிறது. மேலும் இந்த சிக்னல் இயங்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கலாம். எனவே சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மக்கள் ஆரோக்கியமான பயணம் மேற்கொள்ள போக்குவரத்து சிக்னல் மற்றும் ஒவ்வொரு வரும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதும் , கார்களில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது விபத்துக்கள் இல்லா , உயிர் இழப்புக்கள் இல்லாத அற்புதமான பயணமாக கட்டாயம் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
பி. சந்தோஷ் , சேலம்