தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் மருத்துவத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய மருத்துவ செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல்ஆனந்த் குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த நிலையில், அவர் தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையராக தீராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுதுறை கூடுதல் தலைமைச் செயலாளராக நசிமுதின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையராக தரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை ஆணையராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு மாற்றப்பட்டு பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியராக இருந்த விஜயராணி சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆணையராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். உணவு பாதுகாப்பு ஆணையராக லால்வேனா நியமிக்கப்பட்டுள்ளார்.