Skip to main content

டிடிவி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
டிடிவி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

வரும் செப்.16ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி தர முடியாது என திருச்சி மாநகராட்சி மறுத்துள்ளது. 

அதே தேதியில் வேறொருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், டிடிவி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க இயலாது என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

நீதிமன்றத்தை நாடி அனுமதி பெறப்படும் என டிடிவி ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்