Skip to main content

மதசார்பின்மை மற்றும் சுற்றுச்சூழலை வலியுறுத்தி 1008 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி...!

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு சைக்கிள் கிளப் ஒவ்வொரு ஆண்டும் சமூக விழிப்புணர்வுக்காக கடந்த 10 ஆண்டுகளாக சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. அதனையொட்டி இந்த 10- வது ஆண்டில் தமிழ்நாடு சைக்கிள் கிளப் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து மதசார்பின்மை மற்றும் சுற்றுச்சூழலை வலியுறுத்தி 1008 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரத்தை ஞாயிறு அன்று தஞ்சாவூரில் தொடங்கியுள்ளனர்.இதில் சிங்கப்பூர், சுவீடன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் தமிழ்நாடு,நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

 

Bicycle Rally

 



இவர்கள் தஞ்சையில் இருந்து சிதம்பரம், வேளாங்கண்ணி, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை, அழகர் மலை ஆகிய ஊர்களின் வழியாக 1008 கி.மீ கடந்து இறுதியாக தஞ்சையில் பேரணியை முடிக்க உள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு பேரணியின் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள ராஜாராம் கூறுகையில், "நாம் அனைவர் வீட்டிலும் இருசக்கர வாகனம் உள்ளது. அதேபோல் பாதிக்கு மேற்பட்டோர் வீடுகளில் கார்கள் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு இருசக்கர வாகனத்தையும், காரையும் பயன்படுத்த கூடாது.

அப்படி பயன்படுத்துவதால் காற்று தொடர்ந்து மாசடைகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதனை அனைவரும் கருத்தில் கொண்டு சைக்கிள் ஓட்ட வேண்டும். இதனால் உடல் வலுபெறும். மேலும் நம் நாடு மதசார்பின்மையை கொண்ட நாடாகும். இங்கு வாழும் மக்கள் மதங்களை கடந்து சகோதர்களாக வாழ வேண்டும் என வலியுறுத்தி இந்தவிழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாங்கள் செல்லும் சாலைகளில் மக்கள் கூடி இதுகுறித்து விவரம் கேட்கிறார்கள் அவர்களிடம் நின்று பதில் கூறி செல்கிறோம் என்றார். இந்த விழிப்புணர்வு பேரணியில் சிதம்பரம் சுற்றுலா துறை அலுவலர் சின்னசாமி, தமிழ்நாடு சைக்கிள் கிளப் ஒருங்கிணைப்பாளர் வசந்த், உறுப்பினர்கள் ராஜாராம், வெங்கடேசன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலியான சோகம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
US Kansas City Super Bowl parade incident

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் சீஃப்ஸ் சூப்பர் பவுல் என்னும் ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக லட்சக்கணக்கான ரக்பி ரசிகர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்த பேரணியில் கலந்து கொண்ட ரக்பி ரசிகர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில்  3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அமெரிக்காவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரம்மாண்ட பேரணி-1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Over 1000 people participate in a grand rally to condole the demise of Vijayakanth

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இரங்கல் செலுத்தும் வகையில் அனைத்து கட்சி சார்பில் பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர் பாலு உள்ளிட்ட தேமுதிகவினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், திமுக பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், திமுக மாவட்ட துணை செயலாளர் தணிகை தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் உத்திராபதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகி சேகர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

NN

இதில் கலந்து கொண்டவர்கள் விஜயகாந்த்  வாழும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொண்டார். பொதுமக்களின் பல்வேறு குறைபாடு குறித்து அவர் செய்த உதவிகள், திரைப்படத்துறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்வாறு நாணயமாக நடந்து கொண்டார் என்பது குறித்து பேசினார்கள். இதில் அவர் அன்னதானத்தை முழுமூச்சாக செய்தது அனைத்து மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்தும் அவரது புகழ் மறையாமல் இருப்பதற்கு வாழும் காலத்தில் நடந்து கொண்டவிதம் என்று குறிப்பிட்டனர்.

முன்னதாக பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக இரங்கல் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சென்றனர். இது பண்ருட்டி பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.