Skip to main content

என்.ஐ.ஏ. இயக்குநரும் அண்ணாமலையும் ஒரே விமானத்தில் டெல்லி பயணம்!

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

N.I.A. Director and Annamalai travel to Delhi in the same flight!

 

கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வந்துள்ள என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குநர் திங்கர் குப்தா, தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேற்று சந்தித்த நிலையில், தமிழக கவர்னர் ரவியை சந்தித்தும் ஆலோசித்தார். 

 

N.I.A. Director and Annamalai travel to Delhi in the same flight!

 

தமிழகத்தில் சமீபத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை மையமாக வைத்து இந்தச் சந்திப்பு நடந்தது. அந்த ஆலோசனையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல விசயங்கள் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று 11:30-மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என்.ஐ.ஏ. இயக்குநர். அதே விமானத்தில் பாஜக அண்ணாமலையும் டெல்லி செல்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அரசியல்ரீதியாக இந்தப் பயணம் உற்றுக் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, மாநில உளவுத்துறை இதைக் கவனித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜாபர் சாதிக் வழக்கு; என்.ஐ.ஏ. அதிரடி முடிவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Jaffer Sadiq Case; N.I.A. Action

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க. வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது.

இதனையடுத்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். வழக்கு விசாரணை தொடர்பாகத் தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகின்றார்.

அதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இத்தகைய சூழலில் ஜாஃபர் சாதிக்கின் நண்பர் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சதா என்பவரை இன்று (13.03.2024) கைது செய்து அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் இருந்து டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்குச் சென்றுள்ளதா என்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய திருப்பம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Culprit arrest at Bangalore incident

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் எந்தெந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்தது. இதற்கிடையே, இந்த வெடிகுண்டு சம்பவத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், பயங்கரவாதிகள் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்து விசாரணை நடத்தி வந்தது.

Culprit arrest at Bangalore incident

அதே வேளையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை என்.ஐ.ஏ வெளியிட்டு, அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மக்களிடம் கோரிக்கை வைத்தது. இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளதாக என்.ஐ.ஏ போலீசார் தெரிவித்துள்ளனர். பெல்லார் பகுதியில் சபீர் என்பவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.