Skip to main content

“பாஜக ஆட்சி அமைத்தது அதிர்ச்சியை அளிக்கிறது”- தொல்.திருமாவளவன்

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 

thol thirumavalavan

 

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தனது கருத்து என்ன என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

இன்று இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இந்நிலையில், இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மகாராட்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி என்பது அதிர்ச்சி அளிக்கும் செயலாக உள்ளது. இந்திய அரசியலில் மதச்சார்பின்மையை காப்பாற்றுவது கடினமானது என்பதை மகாராஷ்டிரா காட்டியுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் ஜனநாயக நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்