Skip to main content

முகவர்களுக்கான உணவு சொதப்பிய அதிகாரிகள் - அதிருப்தியில் கட்சியினர்

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 


திருவண்ணாமலை தொகுதிக்கான வாக்குபதிவு எண்ணிக்கை மாவட்ட வேளாண்மை மார்க்கெட் கமிட்டியில் நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனச்சொன்ன ஆணையம், அவர்களுக்கான உணவு ஆணையமே வழங்கும். அதற்கான தொகையை வேட்பாளர்களிடமிருந்து ஆணையம் பெற்றுக்கொள்ளும் என சொல்லியது.

 

t

வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி, 8.30க்கு முதல் ரவுண்ட் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், அனைவருக்கும் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது கட்சி முகவர்கள் வெளியே வர ஒருவருக்கும் உணவுமில்லை. வந்திருந்த உணவும், தண்ணீர் வண்டியில் வர அதன்பின்னாலயே ஓடிஓடி சென்று வாங்கி கொளுத்தும் வெய்யிலில் தரையில் அமர்ந்து சாப்பிட்டனர். பாதி பேருக்கு உணவும் கிடைக்கவில்லை. இதனால் திமுக, அதிமுக முகவர்கள் அதிருப்தியடைந்தனர்.


படம் - எம்.ஆர்.விவேகானந்தன்

சார்ந்த செய்திகள்