சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணி கட்சிகள் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியினுடைய கனவு திட்டம். இந்தத் திட்டத்தையும் அவர் நிறைவேற்ற இருக்கிறார், நிறைவேற்ற உறுதியாக இருக்கிறார். நிச்சயமாக திட்டம் கொண்டு வந்தால் 200 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.
அந்த வகையில் இந்தப் பகுதியைப் பொறுத்தவரை மேட்டூர் அணை நீரை இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுப்பதற்குடைய எல்லா திட்டங்களையும் முதல்வர் வைத்திருக்கிறார்கள், தோனி மடுவு திட்டம் மேட்டூர் பகுதியிலும், கொளத்தூர் பகுதியிலும் செயல்படுத்தப்படும். அந்தத் திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
எடப்பாடியாருடைய இந்த சாதனைகள் இந்த மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சனை, விவசாய பிரச்சனை எல்லா பிரச்சினைகளையும் இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல எல்லா மாவட்டத்திலும் நிறைவேற்றியுள்ளளார்.
அவரை புகழ்வதற்காக நான் சொல்லவில்லை எல்லா மாவட்டத்திலும் இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இரவு பகலாக திட்டமிட்டு அவருடைய சகாக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து மிக சிறப்பாக பாடுபடுகிறார்கள்.
அதற்காக அவரை இந்த நேரத்திலே சேலம் மக்கள் சார்பாக தொகுதி சார்பாகவும் நான் பாராட்டுகின்றேன். இந்த வேட்பாளர் கே ஆர் எஸ் சரவணனை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரரை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.