திருபுவனத்தில் மத மாற்றத்திற்கு எதிராக பேசிய பாமகவை சேர்ந்த ராமலிங்கம், கொலை செய்யப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
![ramalingam](http://image.nakkheeran.in/cdn/farfuture/1NTSRripTqOaABhWKtW6B3zzyY-TTywm1HiAA_3fi9U/1556780452/sites/default/files/inline-images/ramalingam_4.jpg)
கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிலர் மதபிரசங்கம் செய்துகொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக சென்ற ராமலிங்கம் என்பவர், மத பிரசங்கம் செய்தவர்களுக்கு எதிராக நடந்துகொண்டார், அங்கிருந்த இஸ்லாமியரின் குள்ளாவை வாங்கி தன் தலையில் போட்டுக்கொண்டு, அவர்கள் நெற்றியில் விபூதியை பூசி ஆக்ரோஷமாக பேசினார், இந்த சம்பவம் சமூக வளைதலங்களில் வைரலாகி பரபரப்பானது.
இந்த நிலமையில் அன்று பனிகளை முடித்துவிட்டு தனது மூத்தமகனோடு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார் ராமலிங்கம். அப்போது இடைமறித்த சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். இந்தகொலை வழக்கில் 11 இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை கண்டித்து பா,ஜ,க, இந்துமக்கள் கட்சி, ஆர்,எஸ்,எஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்கள் நடத்தினார்கள், அதனால் ராமலிங்கத்தின் கொலை தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே போராடங்கள் செய்ததால் இந்த வழக்கு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து கொச்சியிலிருந்து ஏ.எஸ்.பி. சவுக்கத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன் திருபுவனம் வந்து முகாமிட்டு தங்கள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் மூத்த மகன் விஸ்வாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் கொலைக்கு முன்பு நடந்த பிரச்சனை கொலை நிகழந்தபோது யார் யார் இருந்தனர், அவர்களை முன்பின் பார்த்ததுண்டா, கொலை நடந்தபோது உங்களது தந்தை என்ன கூறினார், அதன் பிறகு யார், யார் வந்து சந்தித்தனர், அவர்கள் என்ன கூறினர் என்பன உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.
இது குறித்து குழுவில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்ட விசாரணை நடக்கிறது, அவரது மூத்தமகனிடம் விசாரித்துள்ளோம், இன்னும் அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரிக்கவேண்டியிருக்கிறது. மேலும் சில ஆதாரங்களை காவல் துறையிடம் கேட்டுள்ளோம், அவை கையில் கிடைத்தவுடன் விசாரணையே மேலும் தீவிரப்படுத்துவோம்" என்றார்.
திருவிடைமருதூர் காவல்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கொலையான ராமலிங்கம், பாமகவில் இருந்து விளகி, பிறகு ஆர்,எஸ்,எஸ் ஆதரவாளராக இருந்துவந்தார், அவரது கொலை வழக்கில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது உள்ளூர் பகையால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை கண்டறிய இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.