Skip to main content

"சாப்பாட்டுக்கும் வழியில்லை... சம்பளமும் வந்து சேரலை... புலம்பும் போலீஸ்காரர்கள்..!"

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

சென்னை மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகள், தலைமைக் காவலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15 முதல் 18-ந்தேதிக்குள் உணவுப்படி வழங்கப்பட்டு விடும். ஆனால், இந்த மாதம் தேதி இன்று 28-03-2020 ஆகியும் உணவுப்படி வழங்கவில்லை. இதனால், பெரும்பாலான காவலர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். போலீஸ்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும்போது, "இன்னும் உணவுப்படியை வழங்காமல் இருக்கிறார்கள் ஏன்?" என்ற பேச்சே மேலோங்கி இருக்கிறது.

 

 "There is no way to eat ... and no Salary.. police tear


வழக்கமாக தங்களுடைய காவல் சரகத்தில் உள்ள ஓட்டல்களில் சாப்பாடு வாங்கிக் கொள்வது போலீஸாரின் வழக்கம். தற்போது ஊரடங்கு என்பதால் பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் மூடப்பட்டிருப்பதால், பணியின்போது சாப்பாடு கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது. கைக்காச போட்டு சாப்பாடு வாங்க கடைகளும் இல்லை. மேற்படி கைச் செலவுக்கும் பணம் இல்லாத சூழல் இருப்பதால், உணவுப்படி எப்போது சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்