Published on 24/09/2019 | Edited on 24/09/2019
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவுக்குள் 50,000 அடியை எட்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், காவிரி பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை எட்டிய நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,500 கனஅடியாக உள்ளது.