
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசியலில் பின்னடைவு என்று எதுவும் கிடையாது. இது ஒரு அனுபவம்தான். இதற்கு முன் இரட்டை இலை சின்னம் இல்லாமல் போனது குறித்த கேள்விக்கு கூட இது ஒரு அனுபவம்தான் எதையும் நாங்கள் எதிர்கொள்வோம் எனக்கூறி இருந்தேன் அதுபோல் இதுவும் ஒரு அனுபவம்தான் இதையும் எதிர்கொள்வோம்.
இதற்கு அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடனும் கலந்து ஆலோசித்து அந்த முடிவின்படி நாங்கள் செயல்படுவோம். 18 எம்.எல்.ஏக்கள் மொத்தமாக சேர்ந்து மேல்முறையீடு செய்யலாம் என்றால் மேல்முறையீடு செய்யத் தயார்.
அநேகமாக இன்று மாலை குற்றலாம் செல்வேன். தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலுடன் நடந்தால் மொத்தம் 20 தொகுதிகளிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம் எனவே இதில் எங்களுக்கு சாதகம் அதிகம் என கூறினார்.