Skip to main content

நான் பாஜகவில் சேர்ந்தேனா....?? -நடிகை வரலட்சுமி

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

சிலமணிநேரத்திற்கு முன்பு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி பாஜகவில் சேர்ந்ததாக செய்திகள் வளம்வர, தனது ட்விட்டர் பதிவின் மூலம் அந்த செய்தி பொய்யானது என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

 

bjp

 

பாஜக ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை சந்தித்து சாதனை விளக்க அறிக்கையை பாஜக தலைவர்கள் அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நடிகை வரலட்சுமியை சந்தித்த பாஜக-வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சாதனை அறிக்கையை வழங்கினார்.

இதையடுத்து நடிகை வரலட்சுமி பாஜக-வில் இணைந்து விட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் விதமாக தனது ட்விட்டரில் வரலட்சுமி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 

bjp



அதில், பாஜக தலைவர் முரளிதரராவ் என்னை சந்தித்துப் பேசினார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்களில் பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மிக இனியான சந்திப்பாக அமைந்தது. பிரதமர் நரேந்திர மோடி எங்களுடைய கருத்துகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதற்குள் இந்த சந்திப்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பியவர்களுக்கு சொல்கிறேன், “நான் பாஜக மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்