தென்காசி மக்களவை தொகுதி்யில் திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து இன்று இரவு தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்தார். மக்கள் மற்றும் கட்சியினர் திரண்டிருந்தனர். அதில் பேசிய கனிமொழி, ‘’முன்னாள் பிரதமர் மற்றும் கலைஞர் ஆகிய தலைவர்களால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். அதை இந்த ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை. ஆனால் மறுபடியும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். சம்பளமும் உயர்த்தப்படும். இப்போது பிரதமர் மோடி சவுக்கிதார் என்கிற காவலாளி என்ற பட்டத்தை தனக்குத்தானே சூட்டிக்கொண்டார்.
பாதுகாப்புத்துறை வசம் இருந்த ரபேல் ஆவணம் காணாமல் போனது. அப்போது இந்த காவலாளி என்ன செய்துகொண்டிருந்தார். ஜாதி, மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். தானத்தில் சிறந்த உடல் உறுப்பு தானம். உடல் உறூப்பு தானம் செய்யப்படுவதை ஏழை எளிய நோயாளி மக்களுக்கு தராமல் பெரிய விலையின் அடிப்படையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தவருக்கு விற்கப்படுகிறது.
இது போன்ற நிலைக்கு இந்த ஆட்சி எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலைஞரின் பிள்ளை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். மாணவர்கள் கல்விக்கடன், விவசாயக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும். 10 லட்சம் இளம்பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த பகுதியின் செண்பகவள்ளி அம்மன் தடுப்பணை நிறைவேற்றப்படும் என்று மக்கள் நலனுக்குரிய வாக்குறுதியையும் திட்டத்தையும் பேசினார்.