








தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிட நலத்துறையின் அமைச்சருமான ராஜலட்சுமியின் மகள் ஹரிணி மற்றும் மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நன்னீராட்டு விழா இன்று (23/12/2020) சங்கரன்கோவில் சேர்ந்தமரம் சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியின் பொருட்டு கடந்த 2016- ஆம் ஆண்டு தேர்தலின் போது ‘ஜெ’ தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த அதே பள்ளி மைதானத்தில் மெகா பந்தல் மேடை அமைக்கப்பட்டது. அதே போன்று இன்று (23/12/2020) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் அமரக் கூடி வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று (22/12/2020) மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சரின் இல்ல நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும், மாநகரத்தில் முக்கிய இடங்களிலும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.