These actions are to seize the Nataraja temple.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், “நடராஜர் கோயில், தீட்சிதர்கள் சமுதாயத்தினால் மக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டதற்கான ஆதாரம். தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து கோயில் பராமரிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், கோயிலில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையில்நன்கொடைகள் பெற்று தினசரி பூஜை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றால் அதுகுறித்த வரவு - செலவு கணக்குகள், கோயில் அமைந்துள்ள இடத்தின் நில உரிமை குறித்த வருவாய்த்துறை ஆவணங்கள், நில உரிமை இறைவன் பெயரில் இருப்பின் மேற்கண்ட நிலம் மன்னர்களால் அல்லது அரசால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா? அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வழங்கப்பட்டதா? என்பதற்கான ஆவணங்களை வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Advertisment

தவறும் பட்சத்தில் தங்களால் அளிக்கக் கூடிய விவரங்கள் எதுவும் இல்லை; அடிப்படை ஆவணங்கள் எதுவும் இன்றி ஊடகங்களில் தவறான தகவல்கள் தங்களால் அளிக்கப்பட்டு வருகிறது என முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இதுவே கடைசி கடிதம் இனிமேல் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்க உள்ளதாகவும் கோவிலைக் கையகப்படுத்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.