Skip to main content

கோயில் நிலங்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
 

temple land issues tn govt order chennai high court



தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை  தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்