Published on 23/12/2021 | Edited on 23/12/2021

கோவை காந்திபுரம் 7வது வீதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், வாகனத்தில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை திருடிச் செல்லும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஹெல்மெட்டை தொலைத்த நபர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தனது ஹெல்மெட்டை பெண்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து இன்னும் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும், பல்வேறு பகுதிகளில் ஆண்கள் ஹெல்மெட் திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். ஆனால், பெண்கள் ஹெல்மெட் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.