5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொது தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ஆர்.ஜான் வெஸ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொது தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்றாம் பருவ பாடத்திட்டத்தில் பெரும்பான்மை கேள்விகளும், முதலாம் இரண்டாம் பருவத்தில் பொதுவான கேள்விகள் தேர்வில் இடம்பெறுமாம்,
மாநில அரசுகள் விருப்ப பட்டால் செயல்படுத்தலாம் என்றுதான் மத்திய அரசு சொன்னது, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூடி ஆலோசித்து சாதக பாதகங்களை அலசி முடிவெடுக்க வேண்டாமா!?
அதுவும் பள்ளிக்கு 20 மாணவர்கள் இருந்தால்தான் தேர்வு மையமாம், இல்லையென்றால் அருகில் உள்ள நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப் பட்டு அங்கே 5 கி.மீ (அ) 10 கி.மீ தூரம் நடந்து சென்றோ பேருந்தில் சென்றோ தேர்வு எழுத வேண்டுமாம்,
8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கொஞ்சம் விவரம் அறிந்தவர்கள், சமாளிப்பார்கள், 5 ஆம் வகுப்பு மாணவர்கள் சின்ன பிஞ்சுகள், எப்படி சைக்கிள் மிதிப்பார்களா!? பேருந்தில் ஏறி அடுத்த ஊருக்கு போக தெரியுமா!?யார் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள்!?திரும்ப அழைத்து வருவார்கள்!?
நடைமுறைக்கு ஒத்துவராத செயல்படுத்தவே முடியாத திட்டங்களை அறிவிப்பதும், கிடப்பில் போடுவதும், திரும்ப பெறுவதும்தான் கல்வித்துறை சீர்திருத்தமா!? ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாட முடியுமோ!? அழித்து சீரழிக்க புறப்பட்டுவிட்டார்கள், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்...
இதை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய கடமை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களாகிய நமக்கு பெரும்பங்கு உள்ளது என்பதை உணர்ந்து எதிர்ப்பு பதாகையை உயர்த்தி பிடிப்போம்,ஏழை மாணவர்நலன் காப்போம்! இவ்வாறு கூறியுள்ளார்.