Published on 06/09/2019 | Edited on 06/09/2019
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் தாமஸ். இவர் ஆசிரியர் தினமான நேற்று வகுப்பிற்கு மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து முதல்வர் தாமஸ் குடித்து இருப்பதை உறுதி செய்ததை அடுத்து காவல் நிலையத்தில் ஆசிரியரை பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.

நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவை கொண்டாடி வரும் நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை வழங்குகின்ற, ஆசிரியப் பணியைச் செய்கின்ற ஆசிரியர் ஒருவர் மது குடித்து வந்து வகுப்பறையில் அமர்ந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.