ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூரில் காவல்துறை சார்பில் நகரில் சிலயிடங்களில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. பஜார் வீதியில் சாலையோரம் வைக்கப்பட்டு உள்ளது ஒரு கேமரா. அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்கிற டீ கடை உரிமையாளர், டிசம்பர் 10ந் தேதி இரவு 9 மணியளவில் கேமரா வைத்துள்ள கம்பத்தை பிடித்து நின்றுள்ளார். அப்போது அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலேயே இறந்துள்ளார்.

இதனைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். உடனடியாக இதுப்பற்றி காவல்நிலையத்துக்கு தகவல் கூறியுள்ளனர். அவர்கள் வந்து உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கேமராவுக்கு செல்லும் மின்சாரம் அந்த இரும்பு கம்பியில் பாய்ந்துள்ளது. இதனை இதுவரை யாரும் அறியாமல் இருந்துள்ளனர். இன்று ஏதோச்சையாக சந்துரு அந்த கம்பத்தை பிடிக்க மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார் என்கிறார்கள் பொதுமக்கள்.