கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்று அறிவிப்பை தொடர்ந்து புயல் பாதிக்கும் மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
மாலை 4 மணி முதல் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 8 மணிக்கு பிறகு பரவலாக மழை தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கடலோரக் கிராமங்களில் ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டனம், கட்டுமாவடி போன்ற கடலோர கிராமங்களில் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து முகாம்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களில் மக்களை தங்க வைக்க விளம்பரங்கள் செய்யப்பட்டு பொதுமக்களை அழைத்து தங்க வைத்துள்ளனர். அந்த முகாம்களில் மீட்புக் குழுவினரும் தங்கியுள்ளனர். ஆனால் இரவு 10.30 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது பலமான காற்று இல்லை.