Skip to main content

‘டீ பாலிடிக்ஸ்’ சுவையோ சுவை! -லேட்டஸ்ட் வரவு மம்தா பானர்ஜி!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

டீ, ஏதோ ஒருவிதத்தில் இந்திய அரசியலோடு தொடர்புடையதாகிவிட்டது. பிரதமர் நரேந்திரமோடி சிறு வயதில் குஜராத் – வத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,  தேனி மாவட்டம் - பெரியகுளத்தில் டீ கடையே நடத்தி வந்தார்.

ம்

 

தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவ்வப்போது சாலையோர கடைகளில் டீ குடிப்பதுண்டு. அரசியலில் உச்சம் தொட்டாலும், மக்களிடமிருந்து விலகாமல் இருக்கிறோம்; அவர்களில் ஒருவராகத்தான் வாழ்கிறோம்   என்று சொல்லாமல் சொல்வதற்கு  இந்த  ‘டீ பாலிடிக்ஸ்’  பெரிதும் கை கொடுக்கிறது. இந்த வரிசையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம் பெற்றிருக்கிறார். 

 

ச்

 

ட்விட்டரில் மம்தா பானர்ஜி பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,  முதலமைச்சர் என்ற முறையில் திகா என்ற கடற்கரை கிராமத்துக்குச் சென்று திடீர் ஆய்வு நடத்துகிறார்.

           

க்

 

அப்போது, அம்மா ஒருவரிடமிருந்து பெண் குழந்தையைக் கையில் வாங்கி கொஞ்சிப் பேசுகிறார்.   அங்கு கடையில் தொங்கிக்கொண்டிருந்த கேக் பாக்கெட்டைத் தானே பிய்த்தெடுத்து,  அந்தக் குழந்தையிடம் தருகிறார். மம்தா விசிட்டால் அந்தக் கடையே பரபரப்பாகிவிடுகிறது. ஆளாளுக்கு மம்தாவின் நடவடிக்கைகளைத் தங்களது செல்போனில் வீடியோ எடுக்கின்றனர்.  அதனைத் தொடர்ந்து, அந்தக் கடைக்குள் சென்று அவரே டீ தயாரித்து சிறு டம்ளர்களில் ஊற்றி, தட்டில் வைத்து அங்கிருந்தவர்களுக்குக் கொடுக்கிறார். 

 

ட்

 

7 நிமிடங்கள் 38 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு ‘சில நேரங்களில் சின்னதான சந்தோஷங்களே  வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்கிவிடும்.  டீ தயாரிப்பதும், அதனைப் பிறருக்குத் தருவதும் அவற்றில் ஒன்று.’ என்று  குறிப்பிட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.  

அ

சாமான்யர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரையிலும்,  பாகுபாடின்றி சுவையில் ஆழ்த்தி, உற்சாகம் கொள்ளவும் வைக்கிறது டீ!  


சார்ந்த செய்திகள்