Skip to main content

மீடியாக்களிடம் பேசக் கூடாது.. கொடநாடு கொலை- கொள்ளை குற்றவாளிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

should not open up anything to media about kodanadu estae murder case

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று 3 ஆம் தேதி ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்தியச் சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ் மற்றும் மனோஜ் சாமி, உதயன் ஆகிய நான்கு பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

 

இதனைத் தொடர்ந்து. ஆஜராகாத 6 பேர் வெளி மாநிலங்களில் இருப்பதால் ஈ-பாஸ் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதத்தை முன் வைத்தனர்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து யாரிடமும் பேசக் கூடாது என இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 

 

 

சார்ந்த செய்திகள்