Skip to main content

ஊரடங்கிற்கு பிறகும் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

  Tasmac - TNGovt -chennai highcourt

 

எங்கெல்லாம் மதுக்கடைக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


சென்னையை சேர்ந்த ஆர்.தனசேகரன் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுவால், ஒருவரது குடும்பமே சீரழிந்து விடுகிறது. இந்தியாவில், 33 லட்சம் பேர் மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில் 18 லட்சம் பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள். மக்களின் உடல் நலனையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் கடமை அரசுக்கு உள்ளது. மதுவுக்கு எதிராக பலத்த குரல்கள் எழும்பி உள்ளன. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.  ஆனால், வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கவில்லை, குற்றங்கள் குறைந்துள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னும், மதுக் கடைகளை திறக்கக் கூடாது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரி வருகின்றனர். மேலும் மதுப் பழக்கத்தை பலரும் கைவிட்டுள்ளனர். அரசுக்கும் இது தொடர்பாக, மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஊரடங்கு முடிந்த பின்னும், மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

 

 


இந்த வழக்கு,  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா அமர்வு முன்பு இன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிக்கப்பட்டது.  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, ஊரடங்கினால் மக்கள் குடிபழக்கத்தை மறந்துள்ளனர். எனவே பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாரயணன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எங்கெல்லாம்  திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் தமிழத்தில் திறக்கப்படவில்லை என தெரிவித்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 


 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.