கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மதுவிற்பனை குறைந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அனைத்து பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.450 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
புதன்கிழமை (3-ந்தேதி) திருச்சியில் ரூ.45.29 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. 4-ந் தேதி திருச்சியில் ரூ.49.57 கோடி, என மொத்தம் ரூ.239.81 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 2 நாட்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.431 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது. மற்ற மண்டலங்களைக் காட்டிலும் மதுரை மண்டலத்தில் அதிகமாக மதுவிற்பனை நடந்துள்ளது. அங்கு ரூ.98.89 கோடி மது விற்பனை நடந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் ரூ.88.40 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்றுள்ளன.