தென்மாவட்டத்தின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஜீவ நதியான தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பலர் பரிகாரங்கள் செய்து விட்டு தாங்கள் அணிந்திருந்த துணிகளை ஆற்றில் விட்டுச் செல்கின்றனர். இது சம்மந்தமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்த பகுதியில் தட்டி போர்டுகள் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் அதையும் கண்டு கொள்ளாமல் துணிகளை ஆற்றில் விட்டுச் செல்கின்றனர்.
இதனால் ஆற்றில் குளிப்பவர்களின் காலில் துணிகள் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வாரந்தோறும் ஆற்றில் கிடக்கும் கழிவு துணிகளை நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உத்தரவுப்படி அகற்றப்படுகிறது. நேற்று (10/11/2019) நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் சுகாதார மேஸ்திரி மில்லர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் 5.25 டன் கழிவு துணிகளை ஆற்றிலிருந்து அகற்றினர்.