Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்!

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
pro


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஆர்ப்பாட்டத்தில் இந்திய வரைபடத்திடம் (மேப்) தமிழ்நாடு வரைபடம் மனு அளித்து நூதன போராட்டம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.ராஜாங்கம் வரவேற்று போராட்ட கோசங்களை முன்வைத்தார்.

மாவட்ட மகளிரணி தலைவி நாகலெட்சுமி, கல்வி மாவட்ட தலைவர் புதுக்கோட்டை நாடி முத்து, அறந்தாங்கி கோவிந்தராஜன் கல்வி மாவட்ட செயலாளர்கள் புதுக்கோட்டை செந்தில் குமார், அறந்தாங்கி தனபால், மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.பன்னீர் செல்வம், மாநில துணைச்செயலாளர் கே.ஆர்.சேவுகப்பெருமாள் சிறப்புரையாற்றினர்.

அப்போது மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் இந்திய வரைபடத்திடம் (மேப்) தமிழ்நாடு வரைபடம் மனு அளிப்பது போல் சித்தரித்து நூதனமான முறையில் அந்த மனுவை வழங்கி தமிழத்திற்கு உள்ள காவிரி உரிமை பற்றியும் ஸ்டெர்லைட் ஆலையின் பின்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் பேசினார்.

இந்தப்போராட்டத்தில் காவிரி நீர் உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைத்திடவும்,மற்ற மாநிலங்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் தொடர்ச்சியாக இயங்க அனுமதிக்கிறதே, நாங்கள் இந்தியாவில் இருக்கும் அகதிகளா என்றும், இந்திய அரசு ஒரே வரியை அறிமுகம் செய்துள்ளதைப்போல இந்தியா முழுவதும் சமத்துவமான நீர் பகிர்மான கொள்கையை முன் மொழிந்திடவும், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா பாரத நாட்டில் தனி நாடா என்று கேள்வி கேட்டும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

சார்ந்த செய்திகள்