Skip to main content

'தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

tamilnadu rains regional meterological centre in chennai

 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அதேபோல், அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேத்பட்டில் (திருவண்ணாமலை)- 10 செ.மீ., பெரம்பூரில் (சென்னை) 5 செ.மீ மழை பதிவானது.

 

அக்டோபர் 18, 19- ஆம் தேதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அக்டோபர் 20- ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதி, அந்தமான் கடல், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்