Published on 15/10/2020 | Edited on 15/10/2020
தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக இரணியல் (கன்னியாகுமரி), பெரியாறு (தேனி) தலா 5 செ.மீ., சித்தார், குளச்சல் (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ., வால்பாறை, சின்னக்கல்லார் (கோவை) தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.