வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரத்தில் தலா 13 செ.மீ., கொள்ளிடம் (நாகை) 11 செ.மீ., கொத்தவச்சேரி (கடலூர்) 9, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஏத்தாப்பூர் (சேலம்) தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.