




கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பிறகு நேற்று மாலை 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்தார்.
முன்னதாக, இந்த அறிவிப்புகளின் படி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் திறந்திருக்கலாம். இருப்பினும், கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்காமல் இருக்கவும், கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். அந்த வகையில் சென்னை ஐனாவரம் மார்க்கெட் பகுதியில் மக்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் போலீசார் ஒரு மீட்டர் இடைவெளிகளில் கோடுகளை வரைந்து வைத்தனர். சந்தைக்கு பொருட்களை வாங்க வருவோர் ஒருவர் பின் ஒருவராக அந்த கோடுகளில் நின்று பாதுகாப்பாக காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.