Published on 15/02/2022 | Edited on 15/02/2022

தமிழகத்தில் கரோனா தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், மூன்றாம் அலையில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பின் தாக்கம் அதிக அளவில் இருந்தபோதிலும் இறப்பு விகிதம் 10 மடங்கு குறைவு. அதேபோல நோய்த்தொற்று உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வந்ததும் மிகக்குறைவு. தடுப்பூசியினால்தான் இது சாத்தியமானது. இன்னும் 1.13 கோடி மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. யார் யார் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தார்.