Skip to main content

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

tamilnadu heavy rain cyclone forming

ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.  தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமனை நோக்கி செல்ல வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. 




 

சார்ந்த செய்திகள்