Published on 18/09/2020 | Edited on 18/09/2020

மத்திய தகவல் தொழிநுட்பத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இந்திய 'பி.பி.ஓ' ஊக்குவிப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 7,605 இடங்கள் மூலம் 25,161 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நேரடியாக 8,387, மறைமுகமாக 16,774 பேருக்கு பணி கிடைத்துள்ளதால் இடங்களை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் 2 மற்றும் 3- ஆம் நிலை நகரங்களில் 51 'பி.பி.ஓ.' நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.