Published on 07/11/2019 | Edited on 07/11/2019

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு.சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (07/11/2019) காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.