Skip to main content

தமிழ்நாடு காவல்துறையில் புரட்சி! சென்னையில் ஊர்க்காவல் படையினர் போராட்டம்

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
p

 

தமிழ்நாடு காவல்துறையில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.   சென்னையில் இன்று ஊர்க்காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாகவும் முடிவெடுத்துள்ளனர்.

 

p

 

p

 

தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு அங்கே தேர்தல் பணிக்காக 5 நாட்கள் ஊர்க்காவல் படையினர் அனுப்பப்பட்டார்கள்.   தெலுங்கானாவில் பணி முடிந்ததும் இன்று காலையில் சென்னை திரும்பிய அவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு வந்தனர்.  5 நாள் வேலைக்காக ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபாய் கொடுக்க வேண்டும்.   அந்த சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படாததால் திடீரென சாலையில்  அமர்ந்து போராட்டத்தை துவங்கினர்.  மதியம் துவங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது.  தமிழ்நாடு காவல்துறை வரலாற்றிலேயே இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை.   2500 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

 

pp

 

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ளது போல் பணி நிரந்தரம் வழங்க வேண்டும், போலீசுக்கு உரிய மரியாதையை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷமாக  எழுப்பினர்.  நிலைமை மோசமாவதை உணர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டக்காரர்களூடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.

 

pp

 

இப்போதைக்கு ஊர்க்காவல் படையினர் போராட்டத்தை கைவிட்டாலும்,  தமிழ்நாடு முழுவதிலும் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துச்செல்லும் முடிவில் இருக்கின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்