Published on 25/09/2019 | Edited on 25/09/2019
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள MIT, SAP, ACT, CEG வளாகத்தில் பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பு அறிமுகம் ஆக உள்ளது. அகில இந்திய தொழிநுட்பக் கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தல்படி தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பொறியியல் மாணவர்கள் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் படிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.