தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (02/03/2020) தொடங்கி மார்ச் மாதம் 24- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 4.41 லட்சம் மாணவிகள், 3.74 லட்சம் மாணவர்கள் என 8.16 லட்சம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
"பொதுத்தேர்வுகளில் காப்பி அடித்தல் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபட்டால் அடுத்த இரண்டு முறை தேர்வு எழுத முடியாது. வினாத்தாளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். வினாத்தாளில் விடைகளை குறித்து அடுத்த மாணவருக்கு தந்தால் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர்" என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.
8.16 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படுகிறது.