Published on 02/06/2021 | Edited on 02/06/2021
![tamilnadu 12th std exams chief minister mkstalin discussion](http://image.nakkheeran.in/cdn/farfuture/ojzjML-uzMOts15kQ1wu_FBtLkjKP_DxzTaBczIlE0A/1622613093/sites/default/files/inline-images/MKS4333%20%281%29_17.jpg)
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.