Skip to main content

மாநில மகளிர் கொள்கை; தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Tamil Nadu cabinet approves state women  policy

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்க வழிவகை செய்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய மாநில மகளிர் கொள்கைக்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்